சற்றுமுன்

வாய்ப்பை நழுவ விட்ட வித்யா பாலன்


பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது. ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னைக்குள் உள்ள ஸ்டுடியோவிலேயே செட் அமைத்து வருகின்றனர். இந்தப் படத்தில், ஹீரோயினாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வித்யா பாலன் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்கிறார்கள். தேதிகள் இல்லாததால் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, ‘லிங்கா’ மற்றும் ‘கபாலி’ படத்தில் நடிக்கக் கேட்டபோதும் அவரால் நடிக்க முடியவில்லை. தற்போது, மூன்றாவது முறையாக ரஜினி – வித்யா பாலன் ஜோடி சேர்வது தள்ளிப் போயிருக்கிறது. இதனால், வித்யா பாலனுக்கு ரஜினியுடன் நடிக்க கொடுத்து வைக்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

summary :Vidya-Balan-has-missed-the-offer Vidya Balan is out of the film. He is said to be missing because of dates. Already, he was unable to act even when he was asked to act in 'Linga' and 'Kabali'. Now, for the third time Rajini-Vidya Balan's pairing has been postponed. The fans are saying that Vidya Balan is not acting with Rajini.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.