சற்றுமுன்

கதை, வசனம் எழுதும் விஜய் சேதுபதி


வித்தியாசமான படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, வித்தியாசமாகவும் யோசிக்கக் கூடியவர் விஜய் சேதுபதி. அவர் நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தயாரித்ததோடு, அடுத்து ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார். தற்போது, மூன்றாவது படத்தைத் தயாரிக்கப் போகிறார். ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு விஸ்வநாதன், இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ஆனால், கதை மற்றும் வசனங்களை, விஜய் சேதுபதியே எழுதுகிறார். அவர் எழுதி முடித்த பிறகுதான் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியே நடிக்கிறாரா அல்லது வேறு யாராவது நடிக்கிறார்களா என்பது தெரியவரும். காரணம், ‘கறுப்பன்’, ‘96’, ‘அநீதி கண்கள்’, ‘ஜுங்கா’, ‘சீதக்காதி’, ‘விக்ரம் வேதா’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என ஏகப்பட்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஸ்டேஜில் இருப்பதால், இப்போது புதிய படங்களில் நடிக்க கமிட் ஆவாரா என்பது சந்தேகம்தான்.
Summary:Besides acting in different films, Vijay Sethupathi thinks differently. She produced 'Orange mittai"starring and later produced the film 'Western Season Hill'. Now, he is going to produce a third film. Biju Viswanathan, who directed 'Orange candy', is going to direct this film. But the story and scriptures are written by Vijay Sethupathi

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.