சற்றுமுன்

#ROFLVivegamTeaser என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்


விஜய் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸாகும்போது அஜித் ரசிகர்களும், அஜித் படம், டீஸர், டிரெய்லர் ரிலீஸாகும்போது விஜய் ரசிகர்களும் மாறி மாறி கழுவி ஊற்றிக் கொள்வது வழக்கமான ஒன்று. வடிவேலு பாணியில் சொல்லப்போனால், ‘அவன் குடும்பத்தைப் பத்தி நான் கேவலமா பேசுவேன். என் குடும்பத்தைப் பத்தி அவன் ரொம்பக் கேவலமா பேசுவான்’ என்கிற கதைதான்

நேற்று நள்ளிரவு வெளியான ‘விவேகம்’ டீஸருக்காக, பல்வேறு ஹேஷ் டேக்குகளை டிரெண்டிங் செய்து கொண்டிருந்தனர் அஜித் ரசிகர்கள். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே டவுன்லோடு செய்யப்பட்ட டீஸர் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவியது.

இதனால், #ROFLVivegamTeaser என்ற ஹேஷ்டேக்கை ஆரம்பித்த விஜய் ரசிகர்கள், வரிசையாக விதவிதமான மீம்ஸ்களை இறக்கி வரிசை கட்டினர். மேலும், #ROFLVivegamTeaserMemes என்ற ஹேஷ்டேக்கிலும் பயங்கரமாகக் கலாய்த்து வருகின்றனர்.

Summary:Vijay fans who started hashtag #ROFLVivegamTeaser Ajith fans, Ajith movie, teaser, trailer is released when Vijay's film, teaser, trailer is released. In Vadivelu's style, 'I will not talk about his family. He will tell me very much about my family.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.