சற்றுமுன்

அதிமுக MLAக்களுக்கு ஜெ.தீபா அழைப்பு

அம்மா அவர்கள் 6வது முறையாக முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அம்மா அவர்கள் ஆட்சியையும், கட்சியையும் நம்மிடம் கொடுத்துவிட்டு மீளாத்துயரில் அம்மா அவர்கள் நம்மை விட்டு சென்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அம்மாவின் மறைவிற்குப் பின் இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் அன்பான அழைப்பை ஏற்று அம்மா அவர்கள் விட்டு சென்ற பணியை தொடர்வதற்க்கு நான் தலைமை ஏற்றுள்ளேன்.

இந்நிலையில் ஊழலை மறைப்பதற்க்கும் அதிகார பதவியை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதற்க்கும் சசிகலா,OPS,EPS தலைமையிலான கூட்டங்கள் அம்மாவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் MLAகள்,MPகளை வஞ்சித்து அவர்கள் சுய இலாப நோக்கத்தோடு மட்டும் செயல்பட்டு வருகிறார்கள்.இதனால் கட்சியும்,சின்னமும் முடக்கப்பட்ட நிலையில் OPS,EPSகுழுக்கள் இணைப்பு என்ற பெயரில் பதவியை மட்டும் குறியாக வைத்து MLAக்களை பற்றிப் அக்கறை கொள்ளாத நிலையில் MLAக்கள் அவர்களவது தொகுதி சம்பந்தமான கோரிக்கைக்களை நிறைவேற்றகோரி EPSயை சந்திக்க மனுக்களுடன் தலைமை செயலகத்தில் சந்திக்க முடியாமல் பரிதவிக்கும் காட்சியை பார்த்து மிகவும் வேதனை அடைகிறேன்.

மாலுமி இல்லாத கப்பலாக துடுப்பு இல்லாத படகாக நாம் இருக்கலாமா???நமது அம்மா உருவாக்கிய சிஸ்டத்தை ஓரு சில துரோகிகள் செய்த தவறுக்காக ரஜினிகாந்த் விமர்சனம் செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்???

இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்ற அறிக்கை விட்ட ராமதாஸை கண்டு நாம் சீற வேண்டாமா???

தொண்டர்கள் கொள்கை கோமான்களாக இலட்சிய வேங்கைகளாக அணிவகுத்து நிற்கிறார்கள்.அதிமுக எஃகு கோட்டையாகும்.எளிதில் எதிரிகள் உள்ளே புக முடியாது.அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு பதவி பணம் ஈட்டிய OPS,சசிகலா,EPS போன்றவர்களை அடையாளம் கண்டு தொண்டர்கள் அதிமுகவை மீட்க எனது தலைமைக்கு உளமாற வந்துள்ளதைபோல் அம்மா உருவாக்கிய ஆட்சி தொடர அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினர்யாகிய அம்மாவின் விசுவாசமிக்க MLAக்களை அம்மாவின் இரத்தவாரிசான நான் தாய் உள்ளத்தோடு அழைக்கிறேன்.

எப்போதும் என்னை சந்திக்கலாம்.உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர உங்களின் ஒருவராக இருந்து போராடுவேன்,வாதாடுவேன் கோரிக்கைகளை வெற்றி பெற்றுதருவேன்.அதிமுக என்பது பறவைகள் வந்து செல்லும் வேடந்தாங்கள் சரணலாயம் அல்ல.இலட்சியபாடிவீடு கொள்கை பாசறை .எனவே சூழ்ச்சியும் வஞ்சகத்தையும் வீழ்த்திட அதிமுக எனும் மக்கள் பேர் இயக்கத்தை துரோகிகளிடமிருந்து மீட்டிட மாலுமியாக,படைதலைவியாக பணியாற்றிட அனைத்து நிர்வாகிகள்,MLAக்கள்,MPக்களை மீண்டும் வாஞ்சையுடன் அழைக்கிறேன்.


புரட்சித்தலைவரால் வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தை அம்மா அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட இரட்டை இலையை தற்போது முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியதுபோல இன்னும் நூறு ஆண்டுகள் கட்சியையும்,ஆட்சியையும் தமிழ் மண்ணில் நிலைக்க செய்திடுவோம்.நாளை நமதே நாடும் நமதே.....
                                     

J.Deepa calls for AIADMK MLAs, How can we be able to accept Rajinikanth's criticism for a mistake by some of the traitors of our mother? The movement launched by the revolutionary leader is to restore the double leaf that has been restored by the mother to the rest of the now defunct double leaf, and the revolutionary mother said, as they said, we will still have a hundred years of party and rule in Tamil soil.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.