சற்றுமுன்

உன்னையறிந்தால் - மதுரா கவிதைகள்

விதி நடத்தும் நாடகத்தின்
விந்தை கதாபாத்திரங்கள்
சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று
துயருறவொன்று இன்பம் துய்க்கவொன்று....
நூல்கட்டி ஆட்டுகையில் நூதனமாய் ஆடும் மாந்தர்..
வருமுன்னே அறிவதில்லை வந்தபின்னும் புரிவதில்லை..
நிலையற்ற உலகத்திலே நிலையாய் இருப்பது எது?
தன்னை யறிந்துகொள்ள தவறியும் முயலவில்லை...
எல்லாம் அறிந்தவரென நிலைநாட்ட விரும்பியே
தகுதியை மறந்தே தலைக்கனம் கொண்டு ஆடுகின்றார்...
வார்த்தை வரம் கொடுத்த வல்லவனை இகழ்ந்துரைத்து
ஏகடியம் பேசுகின்றார்....
தான் நடிக்கும் பாத்திரத்தின் தன்மையை உணராமல்
தானே அதுவாகி தப்புத்தாளம் போடுகின்றார்...
உயரே பறந்தாலும் உச்சியில் இருந்தாலும்
உண்மையை உணர்ந்தபடி தரமோடு வாழ்ந்தாலே
தப்பிக்கும் தலையதுவே....

If you know  you , unnaiarinthaal - Mathura poems

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.