சற்றுமுன்

சின்மயிக்கு அடுத்த சிக்கல்!


ட்விட்டரின் ‘சுச்சி லீக்ஸ்’ விஷயம் இப்போதுதான் அடங்கத் தொடங்கியிருக்கிறது. அதனால், ரிலாக்ஸ் ஆனார் பின்னணிப் பாடகி சின்மயி. ஆனால், அதற்குள் அடுத்த சிக்கலில் மாட்டியிருக்கிறார். இசைக் கச்சேரி ஒன்றுக்காக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றிருக்கிறார் சின்மயி.

அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்திருக்கிறார். திரும்பிவந்து பார்த்தால், காரின் பின்பக்க ஸீட் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் திருடு போயுள்ளன. அதை உணர்ந்து கொள்ளவே 5 நிமிடங்கள் ஆனதாம் சின்மயிக்கு.

ஒருவழியாக சுதாரித்து அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், இங்கு இப்படி நடப்பது சகஜம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சின்மயி. காரை பார்க் செய்திருந்த இடத்துக்கு அருகிலுள்ள சிசிடி கேமராவில், திருடியது சிவப்பு தலைமுடி கொண்ட பெண் எனத் தெரியவந்துள்ளதாம். எனவே, போலீஸ் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சின்மயி.

Summary:Twitter's 'Sushi Leaks' thing has just begun. So, Relax became the background singer Chinmayi. But in the next complication he is in trouble. Chinmayi has gone to the San Francisco city of America for a concert. There is a place where he stopped and stopped shopping. On the way back, the car's rear seat glass was broken and the items were stolen.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.