சற்றுமுன்

குறட்டை 360 டிகிரி

குறட்டை பிரச்சனைக்கு குண்டாக இருந்தாலோ, நேராக படுத்தாலோ, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டாலோ, சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டாலோ, சைனஸ் பிரச்சனை இருந்தாலோ, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ வரக்கூடும்.
அதிலும் ஒருவர் அன்றாடம் யோகா செய்து வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில எளிய வழிகளின் மூலமும் குறட்டையைத் தடுக்கலாம்.
* ஆவி பிடிப்பது ஆவி பிடிப்பதன் மூலம் நாசி துவாரங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீங்கும். இதனால் இரவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏதும் இருக்காது.
* யூகலிப்டஸ் எண்ணெய் யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.
* உப்பு கலந்து நீர் இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
* துளசி அல்லது க்ரீன் டீ துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால், குறட்டையில் இருந்து மெதுவாக விடுபடலாம்.
* 2-3 துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.
* சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.
* தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
* ஒருவர் அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்தால், குறட்டை விடக்கூடும். எனவே மனதை எப்போதும் அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம், குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றில் அவ்வப்போது ஈடுபட வேண்டும்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.