அது நீரில் வளரும் இலை ! உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோரியா ரிஜியா”.
பார்ப்பதற்கு பெரிய தாம்பாளத்தட்டு போல் காணப்படும். இது அல்லி வகையைச் சார்ந்தது, இந்த இலை 3 மீட்டர் விட்டம் வரை கூட வளரும்.சராசரியாக இலையின் குறுக்களவு 1.85 மீட்டர். வட்ட வடிவமான இலை மட்டுமே மேல் நோக்கி நீரில் காணப்படும். இதன் அடிப்பகுதியில் வளரும் தண்டு 8 மீட்டர் நீளம் வரை இருக்கும். தண்டுப்பகுதி முழுவதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும். இது மிகவும் வலுவாக இருக்கும். எனவே இதன் இலையின் மேல் குழந்தை உட்கார்ந்தால் கூட இலையால் தாங்கிக் கொள்ள முடிகிறது. இது சுமார் 32 கிலோ எடையைத் தாங்கும் வலிமை கொண்டது.
இதன் பிறப்பிடம் இங்கிலாந்து. இதன் உண்மைப் பெயர் “அமேசானிகா”. விக்டோரியா மகாராணியின் பெருமைக்காக இந்த இலைக்கு அவர் பெயரை வைத்து அழைத்தார்கள்.
இதன் மலர், முதல் நாள் இரவு மலரும்போது வெள்ளையாகவும், மறுநாள் இரவு ரோஸ் நிறத்திலும் மாறும் தன்மை கொண்டது.
a detail discription about worlds big leaf victoria rijiya\regia