சற்றுமுன்

செம்பருத்தி பூ 360 டிகிரி


செம்பருத்தி பூ எல்லோருக்கும் தெரியும். ஆனா அந்த பூவோட மகிமை நிறையபேருக்கு தெரியாது. இன்னைக்கு மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வர்ற நோய்கள்ல இருதய நோயும் ஒண்ணு. இதுக்கெல்லாம் செம்பருத்தி பூ கைகண்ட மருந்து. ஆனா வீடுகள்ல செம்பருத்தியை அழகுக்காக வளக்குறதோட சரி.
அதுலயும் அடுக்கு செம்பருத்தி, மஞ்ச கலர், ரோஸ் கலர்னு நிறைய செம்பருத்தியைத்தான் நிறையபேர் வளக்குறாங்க. 5 இதழ் உள்ள செம்பருத்திதான் நல்லது. காலைல கண் முழிச்சதும் ரெண்டோ, மூணோ செம்பருத்தி பூவை எடுத்து அதோட இதழ்களை மட்டும் பறிச்சி சாப்பிட்டு வந்தா இருதய நோய் வராது. ஏற்கனவே வந்திருந்தாலும் நோய் குணமாயிரும்.
வியாதி உள்ளவங்க 6 செம்பருத்தியை கொண்டுவந்து இதழ்களை மட்டும் எடுத்து அது முங்குற அளவுக்கு தாராளமா தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும். இதுல காலைல 6 ஸ்பூன், சாய்ங்காலம் 6 ஸ்பூன்னு 20 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா இருதய படபடப்பு, இருதய வலி, அடைப்பு எல்லாம் சரியாகும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டா சர்க்கரை சேர்த்துக்கிடலாம்.
இதே கசாயத்தை கல்லீரல் பாதிப்பு உள்ளவங்களும், குழந்தைகளுக்கு வரக்கூடிய வயித்துவலி, வயித்துப்போக்கு, வயிறு உப்புசத்துக்கும் கொடுக்கலாம். காசா பணமா? குடிச்சி பாருங்க. நோய் இல்லாதவங்களும் தாராளமா குடிக்கலாம்.
பூவை மாதிரியே இதோட இலைக்கும் மருத்துவக்குணம் இருக்கு. தலையில பொடுகு உள்ளவங்களும், இளநரை, முடி கொட்டுதல்னு பிரச்சினை உள்ளவங்களும் நாலஞ்சு செம்பருத்தி இலையை அம்மியில வச்சி மையா அரைச்சி தலையில தேய்ச்சி அரை மணி நேரம் குளிச்சி பாருங்க, பலன் கிடைக்கும்.

importance of hibiscus rosa sinensis , Copper-flower 360 degrees,

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.