சற்றுமுன்

கோவில்பட்டி அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் மாற்றப்பட்டு வெங்கடேஷ் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டார். அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் சென்றும் ஊழியர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் போது கோட்டாட்சியர் அனிதா உடனிருந்தார்.தொட...ர்ந்து கோவில்பட்டி தாலூகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் வெங்கேடஷ் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து நெருக்கடி பிரச்சினை, அடிப்படை வசதிகள் , அரசு மருத்துவமனையில் போதிய அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் என மக்களுக்கான தேவைகள் அனைத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Venkatesh was replaced by Ravikumar who was the District Collector of Thoothukudi. Yesterday he accepted his responsibilities.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.