முதலில் சங்கி என்பவர் யார் ?
மத மாற்றம் என்பது தாயை மாற்றுவது போன்ற செயல். அதற்காக, மத வியாபாரிகள், இந்து மதத்தின் மீதும், இந்திய தேசத்தின் மீதும் விமர்சனம் என்ற பெயரில், ரகசியமாக வேறு மதத்தை பின்பற்றும் கைக்கூலிகள் மூலம் பல அவதூறுகளை பரப்புகின்றனர்.
தன் தாயை தரகுறைவாக விமர்சித்தால் தன் தாய் மீது அன்பு கொண்டவருக்கு கோவம் வருவது இயல்பு. அதேபோல் ,
தன் தாய்க்கு இணையாக மதிக்கும் இந்து மதத்தின் மீதும் இந்திய தேசத்தின் மீதும் பரப்பப்படும் அவதூறுகளை கண்டிப்பவர்களுக்கு, கைகூலிகள் கொடுக்கும் பட்டம் சங்கி .
சரி சங்கி அல்லாதவர்கள் யார் யார் ?
தன் தாயை பற்றியோ அல்லது அதற்க்கு இணையான மதத்தை பற்றி அல்லது தேசத்தை பற்றியோ அவதூறு பரப்பினால் அதனை பார்த்துவிட்டு அப்பா பட கதாபாத்திரம் போல், இருக்குற இடம் தெரியாம இருக்கனும் என்பது ஒருரகம் .
ரகம் 2.
தன் தாயை பற்றியோ அல்லது அதற்க்கு இணையான மதத்தை பற்றி அவதூறு பரப்பினால் அதனை பார்த்துவிட்டு , ரஜினி முருகன் படத்தின் சமுத்திர கனியின் ஏழரை மூக்கன் கதாபாத்திரம் போல ஓசி சோறு, டீ, வடை, வோட்டு கிடைக்குமா என்று பார்க்கின்றனர்
ரகம் 3.
தன் தாயை பற்றியோ அல்லது அதற்க்கு இணையான மதத்தை பற்றி அவதூறு பரப்பினால் அதனை பார்த்துவிட்டு. அவர்கள் பலம் கொண்டவர்கள் என்றால் பாட்ஷா படத்தில் ரஜினியை பார்த்த நக்மா அப்பா போல் எடுத்துக்கோங்க எடுத்துக்கோங்க என்பது போல் ஏற்றுக்கொள்கிறார்கள் .